கொங்கு பொறியியல் கல்லூரியில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிலரங்கு

 

ஈரோடு, ஜூலை 24: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் (டிஎன்எஸ்சிஎஸ்டி) நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான கால்நடை வளர்ப்பில் தானியங்கி முறையின் பங்கு குறித்து 3 நாள் தொழில்நுட்ப பயிலரங்கு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் வேளாண் பொறியியல் துறையின் தலைவர் சம்பத்குமார் பங்கேற்று பேசினார்.

கால்நடை வளர்ப்பில் தானியங்கி முறையின் பங்கு, பண்ணையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம், தானியங்கி சாதனங்கள் பயன்படுத்தப்படும் முறை, கால்நடை பண்ணையின் உற்பத்தித்திறன் மேம்படுத்த தேவையான புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள், மத்திய அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிலரங்கத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்டனர். விவசாயிகள் அருகில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு நேரடியாக கள பார்வைக்கும் அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயிலரங்கின் துவக்க விழாவில், கல்லூரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி, மாணவர் நலன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இயந்திர மின்னணுவியல் துறையின் தலைவர் மீனாட்சி பிரியா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இயந்திர மின்னணுவியல் துறையின் பேராசிரியர்கள் மகேஸ்வரி, தமிழரசி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை