கொங்குநாடு மருத்துவமனையில் கோடைகால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம்

 

கோவை, மே 3: கோவை கொங்குநாடு மருத்துவமனையில் கோடைகால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம் கடந்த 35 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை சிறப்பு சலுகையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. இந்த முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாமில், பங்கு பெற்ற பயனாளி ஒருவரை கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராஜூ பரிசோதனை செய்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை