கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வழக்கறிஞர் வீடு: வைரலாகும் வீடியோ

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் வழக்கறிஞரின் வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. வழக்கறிஞரான இவர்  அதே பகுதியில் உள்ள பாலாற்று கரையோரம், இவருக்கு  சொந்தமான நிலத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடுக்கு மாடி வீடு கட்டினார். இந்நிலையில், தமிழக- ஆந்திர மாநில எல்லையோரம் பெய்யும் கனமழை காரணமாகவும், மோர்தானா அணையிலிருந்து,  குடியாத்தம்  கவுண்டன்ய மகாநதியிலிருந்து வரும் நீராலும், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியிலிருந்து வரும் நீராலும், நேற்று காலையில் இருந்தே,  சுமார் 1,800 கன அடி நீர்  பாலாற்றில் கலந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் கரைபுண்டு ஓடிய பாலாற்றின் ஓரமாக கட்டப்பட்டிருந்த இளங்கோவின் வீடு, வெள்ளத்தால் சூழ்ந்து அபாயங்கள் நிறைந்ததாக தெரிந்துள்ளது. உடனே ஆபத்தை உணர்ந்த இளங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவே அவரது வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து நேற்று  பெய்த தொடர் கனமழையாலும், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், இளங்கோவின் வீடு   இடிந்து தரைமட்டமாகி,  பாலாற்றில் அடித்துசெல்லப்பட்டது. வீடு இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு வீடு வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது. அப்போது  வீட்டில் யாருமில்லாததால்  எந்தவொரு பாதிப்புமின்றி தவிர்க்கப்பட்டது. பாலாற்று வெள்ளத்தில் வீடு அடித்துச்செல்லப்படும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்