கே.பி.அக்ரஹாராவில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேர்டு

பெங்களூரு : பெங்களூரு காந்திநகர் தொகுதிக்குட்பட்ட காட்டன்பேட்டை வார்டு கே.பி அக்ரஹாரா 11வது மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தையொட்டி, பல ஆண்டுகளாக கழிவறை ஒன்று பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால், இந்த இடம் குப்பை தொட்டியாக மாறி உள்ளது. மேலும், இந்த இடத்தில் பழுதடைந்த கன்டெய்னர் மற்றும் வாகனங்கள், கட்டிட கழிவுகளை கொட்டி உள்ளனர். மேலும், அந்த சாலையில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை சிதிலமடைந்து உள்ளது. இங்கும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். நடைபாதையை ஆக்கரமித்து வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்து கழிப்பறையை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இன்றுவரை மக்களின் கோரிக்கைக்கு எந்த அரசு அதிகாரியும் செவி சாய்க்கவில்லை….

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்