கே.கே.நகரில் சாலையோரம் வீசப்பட்ட காளி சிலையால் பரபரப்பு

சென்னை: சென்னை கே.கே.நகர் ராமசாமி சாலை 137வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோயில் அருகே கேட்பாரற்று பைக் ஒன்று நின்றது. இதை துப்புரவு பெண் பணியாளர் அம்மு கவனித்தார்.உடனே அந்த பையை அவர் திறந்து பார்த்த போது, 3 எலுமிச்சை பழத்துடன் சிங்கத்தின் மீது காளி ஆக்ரோஷத்துடன் அமர்ந்து இருப்பது போன்ற சிலை இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வெள்ளை நிறத்தில் சிலை இருந்ததால் வெள்ளி சிலையாக இருக்கும் என்று கருதினார். பிறகு சிலையை மீட்ட அவர் உடனே கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அதன்படி கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பிரபு சிலை குறித்து விசாரணை நடத்தினார். இதில், சடங்குகள் செய்து காளி சிலையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோயில் அருகே வைத்துவிட்டு சென்றதும், வெள்ளி போன்ற உலோகத்தினால் ஆன காளி சிலை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருந்தாலும் சிலையை கோயில் அருகே வைத்துவிட்டு சென்ற நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு