கேரளாவில் 40 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி: சாவு பட்டியலில் சேர்க்க 15,000 விண்ணப்பம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். ஆனால், கொரோனா பாதித்து குணமடைந்த பிறகு இறப்பவர்கள் கொரோனா மரண பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. கொரோனா பாதிப்புக்கான உரிய ஆவணங்கள் இருந்தும் மரணமடைந்த ஏராளமானோர் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ‘கொரோனா பாதித்து குணமடைந்த பிறகு ஒரு மாதத்துக்குள் அதன் பின்விளைவுகளால் இறப்பவர்களையும் கொரோனா மரண பட்டியலில் சேர்க்க வேண்டும். இறப்பவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ ,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா குணமாகி ஒரு மாதத்திற்குள் இறந்தவர்கள் பற்றி விவரங்களை கூறி, அவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. …

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்