கேரளாவில் 4 நாள் பலத்த மழை: இடுக்கிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், எர்ணாகுளம் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு