கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்

திருவனந்தபுரம்: கேரளாவில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இன்றும், நாளையும் 6 மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடை வெயில் வாட்டி வதைக்கும். பெரும்பாலான வருடங்களில் இந்த மாதங்களில் கோடை மழை பெய்யும் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது.அதன்படி கடந்த சில நாளாக பாலக்காடு, திருச்சூர், புனலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கொல்லம் மாவட்டம் புனலூரில் 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் இன்றும், நாளையும் கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது….

Related posts

டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை

டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொலை

மும்பையை தொடர்ந்து சென்னையிலும் வானிலை ரேடார் நெட்வொர்க்: புவி அறிவியல் அமைச்சகம் அறிவிப்பு