கேரளாவில் கொட்டித்தீர்த்த மழை: மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் திருவனந்தபுரம் – செங்கோட்டை பாதையில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சபரிமலையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாளாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் நகர பகுதி முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அருகே சுள்ளிமானூர் பகுதியில் திருவனந்தபுரம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.சாலையை ஒட்டி சுமார் 20 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து சாலை முழுவதும் விழுந்தது. இதையடுத்து போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு சாலையின் ஒரு புறம் சீரமைக்கப்பட்டது….

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு