கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விசாரிக்க தனி நீதிமன்றம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதனால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை  மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செல்லூர்ராஜூ (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனம்  திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டுள்ளதால் ஏழைகள் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டி உள்ளது. மா.சுப்பிரமணியன்(சுகாதாரத்துறை அமைச்சர்): தொலை தூரம் செல்லாமல் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்க மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே 60 லட்சம்  மக்களுக்கு வீட்டிற்கு சென்று மருந்து மாத்திரைகள் வழங்கியுள்ளனர். செல்லூர் ராஜூ: திமுக அரசு வந்த உடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டபடி அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: ‘ஒரு தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ உங்கள் தலைவர் எம்ஜிஆர் தான் பாடியுள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள கூட்டுறவு சங்கங்களில் 4,486 கூட்டுறவு சங்கங்களில் 750 சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களில் மட்டும் நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் மட்டும் ரூ.482 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் எம்பி, எம்எல்ஏக்கள் தவறு செய்தால் அந்த வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனி நீதிமன்றம் போன்று கூட்டுறவு சங்க முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆலோசனைகள் பெற்று தனி நீதிமன்றம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவர் ரூ.14 கோடி முறைகேடாக தனது மனைவி பெயரில் கடன் பெற்றுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் ஒரு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் இருந்தது. செல்லூர் ராஜூ: யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். திமுக அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி இன்னும் செய்யப்படாததால் மகளிர் குழுக்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். அமைச்சர் பெரியசாமி: மகளிர் சுய உதவி குழுவினர் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதால் அப்போது துணை முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த திட்டம் தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் செய்து முடிப்பார். எந்த குழப்பமும் அடைய தேவையில்லை. தமிழக அரசு அறிவித்தப்படி மகளிர் சுய உதவி குழுக்களில் ரூ.2,755 கோடி தள்ளுபடி செய்யப்படும். …

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது