கூட்டுறவு சங்கத்தில் கடன்களை திருப்பி செலுத்தி பயன்பெற அழைப்பு

சேலம்: மலையாளப்பட்டி பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் நிதிசார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான மீராபாய் தலைமை வகித்து பேசியதாவது: சங்கத்தில் பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்பிற்கான நடைமுறை மூலதனக்கடன்கள் பெறுவோர், உரிய தவணை தேதிக்குள் திருப்பி செலுத்தும்போது தமிழக அரசால் 7 சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படுவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலைவாழ் மக்களால் பெறப்படும் கறவை மாடு, உழவு மாடு, பட்டி ஆடு, சிறிய பால்பண்ணை, பரண்மேல் ஆடு-கோழி வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் அமைத்தல், டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கான மத்திய காலக்கடன்கள், சுய உதவிக்குழு கடன்களை உரிய வாய்தாவுக்குள் வட்டி இன்றி திருப்பி செலுத்தும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர் மற்றும் சங்க பணியாளர்கள் உடனிருந்தனர். …

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை