கூட்டம் அலை மோதுவதால் ஆதாரை புதுப்பிக்க சிறப்பு முகாம் பொதுமக்கள் கோரிக்கை

தொண்டி,செப்.13: ஆதார் அட்டையை புதுப்பிக்கும் பணி தொண்டியில் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுவதால், சுற்றுவட்டார மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். அதனால் சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 10 வருடங்களுக்கு மேல் எவ்வித திருத்தம் செய்யாத ஆதார் அட்டைகளை புதுப்பிக்க அரசு உத்தரவிட்டது. இப்பணியை ஆதார் சேவை மையங்களில் மட்டுமே செய்ய முடியும். இதற்கான காலக்கெடுவையும் அறிவித்துள்ளதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொண்டியில் உள்ள பாவோடி மைதானத்தில் உள்ள ஆதார் இ.சேவை மையத்தையே நாடுகின்றனர். இதனால் இங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக உள்ளது. அதனால் கிராமங்கள் தோறும் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தவ்ஹித் ஜமாத் செய்யது நெய்னா கூறியது, பாவோடி மைதானத்தில் உள்ள மையம் சிறிய இடமாக உள்ளது. மேலும் தொண்டி மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களும் இங்கு வருவதால், எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சிறப்பு முகாம் நடத்தி அனைவரும் ஆதார் அட்டையை குறிப்பிட்ட தேதிக்குள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்