கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகள் அதிரடி நீக்கம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: நடைபெற்றுமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை நகரக் கழகச் செயலாளர் த.பால்பாண்டி, நகரக் கழகப் பொருளாளர் செல்வம், வால்பாறை நகர் மன்ற உறுப்பினர் அழகுசுந்தரவள்ளி, வெள்ளலூர் பேரூர்க் கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூர்க் கழகச் செயலாளர் அண்ணாதுரை, உப்பிடமங்கலம் பேரூர்க் கழகச் செயலாளர் சுப்பிரமணியன், குளித்தலை ஒன்றியக் கழகச் செயலாளர் சந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரக் கழக அவைத் தலைவர் ஆசாத், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர்க் கழகச் செயலாளர் அப்துல்ரகுமான் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.அதேபோல, சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு இணை அமைப்பாளர் இ.வேலாயுதம், சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாபட்டிணம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.நாகராஜன் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்.திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரக் கழக செயலாளர் மு.மத்தீன், கழக கட்டுப்பாட்டை மீறி வருவதால், உடுமலைப்பேட்டை நகரக் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு துரைமுருகன் அறிவித்துள்ளார்.நடவடிக்கை ரத்துதூத்துக்குடி மாநகரசை் சேர்ந்த எஸ்.ேஜ.ெஜகன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழக பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கட்சியின் உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்