கூடலூரில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர், அக். 28:பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் ஜிம்மா தொழுகை முடித்து விட்டு இஸ்ரேலை கண்டித்து பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கூடலூர் எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் சாகுல் அமீது தலைமையில் முஹைதீன் ஆண்டகை பள்ளிவாசல் அருகில் தொழுகை முடித்த பின்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் காதர் கலந்து கொண்டார். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதித் தலைவர் அஜ்மீர்கான் பேசினார். நகரத்துணைத் தலைவர் சபீர்கான், நகரச்செயலாளர் நாகூர் மீரான் மற்றும் கட்சியினர், ஜமாத்தினர் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கண்டிக்கும் விதமாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நகர செயலாளர் நாகூர் மீரன் நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை