புதுடெல்லி,: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் 15வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆண்டுதோறும் கூகுளில் அதிகம் தேடப்படும் நபர்கள் பற்றிய விவரம் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஆசிய நடிகர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவராக விஜய் 15வது இடத்தையும் சூர்யா 45வது இடத்தையும் தனுஷ் 46வது இடத்தையும் பிடித்துள்ளனர். விஜய் கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு அவர் 15வது இடத்துக்கு முன்னேற, ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. இதையடுத்து விஜய் கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்….
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய நடிகர்கள்: விஜய்க்கு 15வது இடம்
previous post