‘‘குவார்ட்டருக்கு அதிகமா துட்டு’’ நடுரோட்டில் படுத்து போதையில் பெண் ரகளை

அந்தியூர்: அந்தியூரில் நடுரோட்டில் படுத்து, பெண் ஒருவர் போதையில் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டின் நடுவே படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அவர் மீது வாகனங்கள் ஏதாவது ஏறி விடப்போகிறதே என்று பதற்றப்பட்ட சிலர், அந்தப் பெண்மணியின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்தப் பெண் மதுபோதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்து கொண்டிருந்தது தெரிய வந்து. இதையடுத்து அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ரோட்டின் ஓரமாக விட்டனர். ஆனாலும், அந்தப் பெண் மீண்டும் வந்து நடுரோட்டில் படுத்துக் கொண்டு ரகளை செய்தார். டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் 15 ரூபாய் அதிகம் வாங்குவதாகவும், இதை தடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் நியாயமான விலையில் மது விற்க வேண்டும் என்று போதையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் போலீசார் விரைந்து வந்து,  அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கிக் கொடுத்து கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!