குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட முதியவர் மீட்பு

மார்த்தாண்டம், செப். 23: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சப்பாத்தின் மேல் பகுதி வழியாக தண்ணீர் பாய்வதால் குறுக்கு சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (68) என்பவர் குழித்துறை தாமிரபரணி சப்பாத்து பாலத்தில் நேற்று காலை குளிக்க வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து உடனே குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொது மக்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை