குழாய் உடைப்பால் வீணான குடிநீர்

கூடலூர்: கூடலூர் நகராட்சியில் வாறுகால்களில் கழிவுகளை அகற்றும் பணியும், வாறுகால் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகரில் உள்ள 2வது வார்டு பட்டாளம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் வாறுகால் கட்டுவதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இப்பணிக்காக நேற்று பழைய தரைப்பாலத்தை ஜேசிபி மூலம் இடித்துள்ளனர். அப்போது, அவர்களது கவனக்குறைவால் பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட குடிநீர் பகிர்மானக்குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக வெளியேறியது. இப்பகுதியில், கடந்த 2 தினங்களாகத்தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாறுகால் கட்டும் பணியில் பகிர்மாணக்குழாயை உடைத்ததால், இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும். கவனக்குறைவாக பணிசெய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நகராட்சி  நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது