குளிர்பதன கிடங்கை பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

 

ஈரோடு, பிப். 3: தங்களது விளை பொருள்களை பாதுகாக்க விவசாயிகள் குளிர்பதனக் கிடங்கை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு வேளாண் விற்பனைக்குழுச் செயலர் சாவித்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் புன்செய் புளியம்பட்டி, அந்தியூர், அவல்பூந்துறை, கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் தலா 25 டன் எடையிலான நவீன குளிர்ப்பதனக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கிடங்குகளில் மஞ்சள், துவரை, உளுந்து, கொள்ளு, பச்சை பயறு, மிளகாய், புளி, கொத்தமல்லி ஆகிய விளை பொருள்களை, அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள்களுக்கும், எளிதில் அழுகக்கூடிய பொருள்களான காய்கறிகள், பழங்களையும் பாதுகாத்திட, விவசாயிகள் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன் பெறலாம். நடப்பு ஆண்டில் 4,757 டன் அளவு தானியங்கள், பழங்களை 361 விவசாயிகள் குளிர்ப்பதன கிடங்கில் இருப்பு வைத்தி பயன்பெற்றுள்ளனர்.

எனவே விவசாயிகள், தங்களுக்கு அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, தங்களது விளை பொருள்களை குளிர்ப்பதன கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்தி விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து