குளித்தலை அண்ணாநகர் புறவழிச் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்

 

குளித்தலை, ஜூன் 21: கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் உள்ள சாலை இருபுறமும் மரக்கிளைகள் அகன்று இருப்பதால் மின்சார வயர்கள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் அண்ணாநகர் புறவழிச் சாலை சிறிய சாலையாக இருப்பதால் மரக்கிளைகள் வாகனங்களில் உரசும் நிலை ஏற்படுகிறது.

மேலும் பருவ மழை தொடங்கும் காலம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பணியாளர்கள் காவேரி நகர் உழவர் சந்தையில் இருந்து அண்ணாநகர் புறவழிச் சாலை மணப்பாறை ரயில்வே கேட் வரை சாலை இருபுறமும் போக்குவரத்து இடையூறாக இருக்கும் மர கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தடைபடாமலும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சென்று வரும் சூழ்நிலை ஏற்படும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணிகள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து