குற்றப்பின்னணி எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கு; அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது.! சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சு பேசுவோரை தகுதி நீக்கம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை அந்தந்த மாநில சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. தற்போது உள்ள சட்டத்தின்படி குற்றப்பின்னணி உறுதி செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படுகிறது. பாஜக தலைவர்களில் ஒருவரான அஷ்வினி உபத்யாய் என்பவர்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘குற்றப்பின்னணி கொண்ட எம்பி,  எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் பொருட்டு, அக்கட்சியின் சார்பில் வெறுப்புப் பேச்சு பேசுவோரை சம்பந்தப்பட்ட கட்சி தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரத்தை திரும்ப பெறவேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தலைமை தேர்தல் ஆணையம் இம்மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் மேற்கண்ட மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டல் நெறிமுறைகள் அமலில் உள்ளன. வெறுப்பு பேச்சு பேசுவோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் (தேர்தல் ஆணையம்) அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகள்தான் முடிவெடுக்க முடியும். மேலும் அந்த கட்சிகளை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது’ என்று தெரிவித்துள்ளது….

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு