குறைதீர் கூட்டத்தில் 5.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ₹5.5 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜான்லூயிஸ் வழங்கினார். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். இதில் முதியோர், விதவை, கல்வி, திருமணம், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றுக்கான உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், பசுமை வீடுகள் உள்பட பல்வேறு கோரிக்கை அடங்கிய 205 மனுக்கள் பெறப்பட்டன. அதனை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பரிசீலனை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 13 பேருக்கு இலவச சலவை பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு செல்போன் உள்பட பல்வேறு ₹5.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை