குருவாயூர் தேவஸ்தான வளர்ப்பு யானைகள் மையத்திற்கு பெண் துணை மேலாளர் நியமனம்

பாலக்காடு: குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக 44 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகள் புணத்தூர் யானைகள் தாவளத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த யானைகள் திருவிழா காலங்களில் மட்டும் கோவில்களுக்கு வாடகைக்கு அனுப்பப்படுகிறது.புணத்தூர் கோட்டை யானை தாவளத்தில் வளர்க்கப்படும் யானைகளை கடந்த 47 ஆண்டுகளாக ஆண் மேலாளர் பராமரித்து வந்தார். இந்நிலையில், குருவாயூர் தேவஸ்தானத்தில் யானைகள் பராமரிக்கும் தாவளத்தில் துணை மேலாளராக சி.ஆர்.லெஜூமோள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை ரவீந்தரன் நாயர் யானை பாகனாக வேலை பார்த்து விபத்தில் இறந்துவிட்டார். இவரும், லெஜூமோள் கணவரும் யானை கொட்டாரத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை ரவீந்தரன் நாயர் இறப்பால் கருணை அடிப்படையில் லெஜூமோள் குருவாயூர் தேவஸ்தானத்தில் எழுத்தாளர் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது யானைகள் பராமரிப்பு மையத்தில் துணை மேலாளர் பதவி ஏற்றுள்ளார். புணத்தூர் கோட்டையில் 5 பெண் யானைகளும், 39 ஆண் யானைகளும் குருவாயூர் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் வளர்க்கப்படுகிறது. மேலும், பசு மாட்டு பண்ணையும் உள்ளது. இந்த யானைகள் அனைத்தும் வாடகைக்கு விடுவது, 110 பேர் அடங்கிய யானைப்பாகனங்களில் வரவு-செலவு கணக்குகள் சரி பார்ப்பது உட்பட அனைத்து வேலைகளையும் துணை மேலாளர் லெஜூமோள் கவனிப்பார்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை