குருந்தமலை அடிவாரத்தில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த நபர் கைது

 

காரமடை, ஜூன் 2: காரமடை அடுத்துள்ள குருந்தமலை அடிவார பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல் ஆய்வாளர் ராஜசேகரனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த எஸ்ஐ அரவிந்தராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், அவர் துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ரங்கநாதன் (40) என்பதும், சட்டவிரோதமாக விற்பனைக்காக 2,050 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி