கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச்சாவடியில் கொரோனா விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

பொன்னேரி: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி  சா.மு.நாசர் பங்கேற்றார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கொரோனா விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதி ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பலூனை பறக்கவிட்டார். நிர்வாகிகள் சதாசிவலிங்கம், ஜலந்தர், சந்திரசேகர், இளங்கோ சுகுமாரன், வல்லூர் ரமேஷ்ராஜ், மோகன்ராஜ், செயல் அலுவலர் வெற்றியரசு, மீஞ்சூர் வட்டார மருத்துவர் ராஜேஷ், தாசில்தார் மணிகண்டன், பழவேற்காடு அலவி, கதிரவன், திருமலை, அறிவழகன், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், அவ்வழியே சென்ற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய அமைச்சர் சா.மு.நாசர், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்….

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு