குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

குன்னூர் : குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்கம் பணி நடைபெற்ற இடத்தில் பிளவு ஏற்பட்டதால் தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பதினேழு இடங்களில் சாலை விரிவாக்க பணி தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. இதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட கழிவு நீர் செல்ல பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த ஒன்பது மாத காலமாக முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சாலை விரிவாக்க பணி நடைபெறும் போது   சாலையில் சுமார் 7 மீட்டர் வரை சாலையில் பிளவு ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும்  கோத்தகிரி வழியாக  மாற்றப்பட்டுள்ளது.அதன்படி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வர கனரக வாகனங்கள் இந்து சாலையில் அனுமதிக்கப்படுகிறது. பிளவு ஏற்பட்ட பகுதியில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளது.  நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு