குன்னூர் நீதிமன்றம் சார்பில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஊட்டி, ஏப். 12: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக சுமூக முறையில் தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நீதிமன்றங்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சார்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நடுவர் இசக்கி மகேஷ்குமார், விரைவு நீதிமன்ற நடுவர் அப்துல் சலாம், உரிமையியல் நீதிமன்ற நடுவர் ராஜ்கணேஷ் ஆகியோர் பங்கேற்று சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது. விரைவாக கையாண்டு சுமூகமான தீர்வுகளை கட்டணமின்றி பொதுமக்கள் பெற்று கொள்ள முடியும் என அறிவுறுத்தினர். இதில் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் குன்னூர் நீதிமன்றத்தில் இருந்த கோத்தகிரி பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியின் போது சமரச மையம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்