குன்னூர் காபி வாரியத்தை இடமாற்றம் செய்ய முடிவு: பழங்குடியின மக்கள் அவதி

குன்னூர்: குன்னூரில் இயங்கி வரும் காபி வாரியத்தினை கூடலூர் பகுதிக்கு மாற்றுவதால் பழங்குடியின மக்கள் அவதியடைந்துள்ளனர்.குன்னுர் மற்றும் கூடலூர் பகுதியில் இந்திய காபி வாரியம் இயங்கி வருகிறது. குன்னூர் பகுதியில் கடந்த 40  ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு மஞ்சூர், கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பழங்குடியின மக்கள் காபி வாரியத்தின் மூலம் பயனடைந்து வந்தனர். இந்த காபி வாரியம் மூலம்  பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளின் கல்வி தேவை விவசாயம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில் குன்னூரில் இயங்கி வரும் காபி வாரியம் கடந்த 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அதனை தற்போது கூடலூர் பகுதிக்கு மாற்ற காபி வாரியம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 14ம் தேதிக்குள் மாற்ற உத்தரவிட்டுள்ளனர். இங்கு செயல்பட்டு வரும் காபி வாரியத்தினை கூடலூர் பகுதிக்கு மாற்றினால் இங்குள்ள பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.  60 கி.மீ., தொலைவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வரக்கூடிய பழங்குடியின மக்கள் மீண்டும் பல கிலோ மீட்டரில் உள்ள கூடலூர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே குன்னூர் பகுதியிலே தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்