குன்னூரில் பல் மருத்துவர்கள் மாநில மாநாடு

ஊட்டி, செப். 29: நீலகிரி மாவட்டத்தில், மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் தலைமையில் மண் சரிவுகள் தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் மண்சரிவுகள் மற்றும் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் ஆகியவை குறித்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், முழு நேர திட்டக்குழு உறுப்பினர் மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினர் பேராசிரியர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தெரிவித்தார். மேலும், கூட்டத்தில், மாவட்டத்தில் 283 அபாயகரமான பகுதிகள் உள்ளன எனவும், இந்த அபாயகரமான பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளது எனவும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது எனவும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் கீழ், வரும் கல்வெட்டுகள் மற்றும் பாலங்கள் ஆகியவை முறையாக தூர் வாரப்பட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், மண் சரிவுகளை தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவுகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) தங்கவேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், (இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) நாகபுஸ்பா ராணி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் காய்த்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து