குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை

 

ஊட்டி, அக். 5: குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று குன்னூர், அருவங்காடு, காட்டேரி, எடப்பள்ளி போன்ற பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஓதனட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள தேயிலை செடிகள் மழைநீரில் மூழ்கியது.

மேலும் அங்குள்ள மோட்டார் அறை மற்றும் குடிநீர் சேமிப்பு தொட்டியை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் ஏற்படுக்கூடிய இடங்களில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மழை பாதிப்புக்களை சீரமைக்க தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை