குண்டாசில் இருவர் கைது: தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவு

சென்னை: திருச்சி காட்டூரை சேர்ந்த பிரவீன் (எ) அசோக் (29), பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கார்களை பெட்ரோல் ஊற்றி எரித்தல், கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறி, கூட்டாளிகளுடன் சேர்ந்து திருச்சியில் திருட்டு, ஆள்கடத்தல், கொள்ளை, வெடிகுண்டு வீசுதல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் ஆள்கடத்தல் என 2 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் கொள்ளையடித்தது, அம்பத்தூர் பகுதியில் ஆள் கடத்தல், திண்டுக்கல் மாவட்ட பழனி காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் ஆகிய வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அசோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், மேடவாக்கத்தை சேர்ந்த சத்யகுமார் (எ) சத்யா (25), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிதடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டார். …

Related posts

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்

ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது