குடிசையில் இயங்கும் ஸ்கேன் சென்டர் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா கண்டறிந்து சொன்ன 2 பேர் கைது

திருப்பத்தூர்:  சென்னை  சுகாதாரத் துறை கண்காணிப்பு குழுவினர் நேற்று, திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி மகிமைகாரன் தோட்டம் என்கிற காட்டுப் பகுதியில் ஒரு குடிசையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் மூலமாக கண்டறிந்து சொல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து குடிசையில் இருந்த ஸ்கேன் டெக்னீசியன் சுகுமார் (வயது 51), அவரது உதவியாளர்  வேடியப்பன் ஆகிய 2 பேரை பிடித்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிய ஒருவரிடம் ₹15 ஆயிரம் பெற்று வந்ததும், இவர்களில் சுகுமார் ஏற்கனவே 4 முறை இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, குடிசையில் இருந்த ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் ₹75 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். வெளியில் காத்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘மிரண்டா’’- ‘‘பேன்டா’’ ஆகிய சங்கேத வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, பேன்டா என்றால் ‘‘பிமேல்’’ (பெண்), மிரண்டா என்றால் ‘‘மேல்’’ (ஆண்) என்று தெரிவித்துள்ளனர். இதற்காக ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர் என தெரிவித்தனர்….

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!