குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு: புறக்கணித்த தமிழக அமைச்சர்கள்..!

சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும், குஜராத்தில் நடைபெறுகிறது, இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் தமிழகம் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்க்கவித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் துறை செயலாளர்களும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்த 2 நாள் மாநாட்டில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. தேசிய அளவில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதம் வந்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தக்கூடிய நிலை புதிய கல்வி கொள்கையில் இருக்கிறது இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குஜராத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை