குஜராத்தில் இலவச மழை ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்: பாஜ தேர்தல் வாக்குறுதி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது. இதனால், இம்முறை மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, 300 யூனிட் இலவச மின்சாரம், பசு வளர்த்தால் தினமும் ரூ.40 என பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வழங்கி உள்ளது. காங்கிரசும் பல இலவச அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குஜராத் மாநிலத்தில் உள்ள உஜ்வாலா பயனாளிகளான 38 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். குடிமக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1,000 கோடி நிவாரணம் வழங்கப்படும். இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் குழாய் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) மீதான 10 சதவீத மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்