கீழ்வேளூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு

 

கீழ்வேளூர்,நவ.21: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பத்மநாபன் முன்னிலை வைத்தார். மாநாட்டில் வருவாய் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண் விடுப்பினை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தமிமுன் அன்சாரி, மாவட்ட செயலாளர் தனஞ்செயன் கீழ்வேளூர் வட்ட நிர்வாகிகள் ஸ்டாலின் ராஜ், அகிலா, அனுசியா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கபிலன், பாரி, சண்முகநாதன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்