கீழ்பென்னாத்தூர் அருகே 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த  கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவர் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில், ஒரு ஆடு குட்டி போட இயலாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அருகில் உள்ள கொளத்தூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு நேற்று ஆட்டை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது, 8 கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்தது. இதில், குட்டிக்கு மார்புக்கு கீழ் இரண்டாகவும், மார்பு, தலை மற்றும் கழுத்து  ஒன்றாகவும் இருந்தது. சிறிதுநேரம் கழித்து குட்டி பரிதாபமாக இறந்தது. இருப்பினும், 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் ஆனந்தன் கூறுகையில், ‘கரு உருவாவதில் ஏற்பட்ட பிறவி கோளாறாக இருக்கலாம்’ என்றார்….

Related posts

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை