கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பேரவை கூட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை9: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பேரவை கூட்டம் கீழையூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம் பேசினார். பாசன வாய்க்கால்கள், ஆறுகளில் புதர்கள் போல மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டும் பல்வேறு விவசாய நிலங்களுக்கு இதுவரை போதிய தண்ணீர் சென்று சேர வில்லை. எனவே முறை வைக்காமல் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14ம் தேதி திருக்குவளையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை