கீழக்கானத்தில் ₹20 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம்

உடன்குடி,மார்ச் 5: கானம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழக்கானத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேஸ்வரி ராமஜெயம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அந்தோனி காட்வின் முன்னிலை வகித்தனர். சோனகன்விளை ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் அம்பிகாபதி திருமலை வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துணை சுகாதாரநிலையத்தை திறந்துவைத்து குத்துவிளக்கிகேற்றினார். விழாவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வக்குமார், ஆனந்தராஜ், கானம் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், கானம் நகர திமுக செயலாளர் ராமஜெயம், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கிருபாகரன், திமுக வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை