கீழக்கரையில் கந்தூரி விழா கொடியேற்றம்

கீழக்கரை, ஜூன் 21: கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத் மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்ஹா 849ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை புது பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாத் உலமாக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முஹமது அஸ்லம் ஆலிம் ஆகியோர் உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதில் ஜமாத் பிரமுகர்கள் அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாட்ஷா, சாகுல் ஹமீது (எ) ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், சதக் அப்துல் காதர், கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான் கீழக்கரை அனைத்து ஜமாத்தார், அரூஸ்யா பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 18 நாள் நடைபெறும் பிரார்த்தனையில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படுகிறது. கந்தூரி விழா ஜூலை 6ம் தேதி நடைபெறவுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை