கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை

 

கிருஷ்ணகிரி, ஏப்.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாரூர் மற்றும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பாம்பாறு-54, ஊத்தங்கரை-41.80, போச்சம்பள்ளி-21.20, பெணுகொண்டாபுரம் -15.20, நெடுங்கல்-7, பாரூர்-7 என மொத்தம்-146.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இதேபோல், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 384 கனஅடியாக இருந்த நிலையில், நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து 384 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.66 அடிக்கு தண்ணீர் உள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 163 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று காலை 195 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 673 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 45.45 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை