கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டால் 363 எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யலாம்: ஏடிஆர் தகவல்

புதுடெல்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை குழு (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல்  கண்காணிப்பு ஆகியவை 542 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953  எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்களை 2019 முதல் 2021 வரை ஆய்வு செய்துள்ளன. மொத்தம் 2,495  எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களில் 363 பேர் (15 சதவீதம்) மீது குற்றவியல் புகார்கள் அளிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்து வருகின்றனர். இதில் 296 எம்எல்ஏக்களும், 67  எம்.பி.க்களும் உள்ளனர். அதிகபட்சமாக பாஜவை சேர்ந்த 83 எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 47, திரிணாமுல் காங்கிரஸ் 25 பேரும் அடங்குவர். 24 சிட்டிங் மக்களவை உறுப்பினர்கள் மீது மொத்தம் 43 கிரிமினல் வழக்குகள்  நிலுவையில் உள்ளன. 111 சிட்டிங் எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 315  கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நிலுவையில் உள்ளன.கிரிமினல் வழக்குகளை அறிவித்த மாநிலங்களில்  நான்கு ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் 35 அமைச்சர்கள் உள்ளனர். குற்றத்திற்காக தண்டனை பெற்ற நபர் தண்டனை பெற்ற நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். அதன்டி, மொத்தம் 363 எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குற்றவியல்  குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ்  அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு