கிரிக்கெட் போட்டி

 

கோவை, மே.10: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக கிரிக்கெட் லீக் போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கோவை பீளமேட்டில் தனியார் மருத்துவக்கல்லூரி மைதானத்தில் முதல் டிவிஷன் போட்டி நடைபெற்றது. இதில் கோவை நைட்ஸ் அணியுடன் காஸ்மோ வில்லேஜ் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த கோவை நைட்ஸ் அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய சரவணக்குமார் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்தார்.

மனிபாரதி 34 ரன்கள் எடுத்தார். காஸ்மோ வில்லேஜ் அணி சார்பாக பந்து வீசிய கெளதம் மற்றும் ஹரிஹரன் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஸ்மோ வில்லேஜ் அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை நைட்ஸ் அணி சார்பாக பந்து வீசிய ஷாஜகான் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 44 ரன்கள் வித்தியாசத்தில் கோவை நைட்ஸ் அணி வெற்றி பெற்றது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை