கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தண்ணீரை தேடி வந்த போது தவறி விழுந்த 2 வயதுடைய மானை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம் ஊர் அருகில் 40 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. அங்கு தண்ணீர் தேடி வந்த இரண்டு வயதுடைய ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது. இதனை அங்கிருந்த கிராம மக்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குளம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவலார்குளம் பீட் வனக்கப்பாளர் டென்சிங் ஆலங்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெகாடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை உயிருடன் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த புள்ளி மான் அய்யனார்குளம் வன பகுதியில் விடப்பட்டது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி