கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கந்தர்வகோட்டை, மார்ச் 30: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சியில் உதயபாரதி என்பவருக்கு சொந்தமான பெரிய கிணறு உள்ளது. அதில் தற்சமயம் தண்ணீர் இல்லாததால் பயனற்று இருந்த நிலையில். வயல் வரப்புகளில் மேய்ந்து கொண்டு இருந்த இந்திய தேசியப் பறவையான மயில் கிணற்றில் தவறுதலாக விழுந்து விட்டது.

இதை கண்ட மக்கள் தீயணைப்பு உதவி எண் 100க்கு அலைபேசியில் கூறியவுடன் அங்கு இருந்து கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பெயரில் நிலைய அலுவலர்கள் சிவகுமார், அறிவழகன் மற்றும் வீரர்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்து சென்று உள்ளனர். ஆழமான கிணற்றில் மயில் உயிருடன் இருப்பதை கண்ட வீரர்கள் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி மயில் பறவை பத்திரமாக உயிருடன் மீட்டு வன பகுதியில் விட்டனர். கடும் முயற்சி எடுத்து மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்