காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பின் 349 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின், 3ம் நாளான நேற்று மாநிலங்களவை எம்பி நீரஜ் டங்கி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு, இந்தாண்டு ஜனவரி 26ம் தேதி வரை 349 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதம் தொடர்பான 541 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் 109 பேர் வீர மரணமடைந்துள்ளனர். இதன் போது, பொதுசொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. ரூ.5.3 கோடி மதிப்பிலான தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன என்றார்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்