சென்னை: காவல்துறையினருக்கு எதிரான புகார்களை அவர்களே எப்படி விசாரிக்க முடியும் என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான நபரை நியமிக்கும் வகையில் திருத்தம் செய்து ஒரு வாரத்தில் அரசு விளக்கம் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது….