காவலர் சொந்த இல்லத்தின் லட்சணம் எப்படி? எடப்பாடி கேள்விக்கு முதல்வர் பதிலடி

சென்னை: காவலர்களுக்கு சொந்த இல்லம் என்ற திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: உங்கள் ஆட்சியில், சொந்த இல்ல திட்டத்தை கொண்டு வந்ததாகவும் அது தொடர வேண்டும்  என்றீர்கள். எங்களிடம் கேட்பதை விட காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், இந்த திட்டத்தின் லட்சணம் தெரியும். இந்த திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் தரம் குறைவாக உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விண்ணப்பங்கள் செய்தும், முன்பணம் செலுத்தியும் வெகு நாட்களாக காத்துக்கொண்டு இருக்கும் நிலை தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், விண்ணப்பித்த பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். இது தான் தற்போது இருக்க கூடிய சூழ்நிலை. இந்த அரசை பொறுத்தவரையில் நீங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக கைவிட மாட்டோம். அதை இன்னும் சிறப்பாக, காவலர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் என்பதை உறுதி அளிக்கிறேன்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு