காளை மாட்டு சிலை வணிக வளாக கடைகளுக்கு நாளை பொது ஏலம்

 

ஈரோடு, ஜூலை 26: ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் கட்டப்பட்ட வணிக வளாக கடைகளுக்கு நாளை (27ம் தேதி) பொது ஏலம் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.94 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் 62 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகள், உணவகம், சிறுவர் விளையாட்டு அரங்கம், வாகன நிறுத்துமிடம் ஆகிய குத்தகையினங்களுக்கான 3 ஆண்டுகள் மற்றும் 9 ஆண்டுகள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான பொது ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான ஏலம் ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் நாளை (27ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஏற்கனவே வைப்புத்தொகை செலுத்தி, அதற்கான ரசீது பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என மாநகராட்சி ஆணையார் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை