காளாஞ்சிப்பட்டியில் போட்டி தேர்வு மையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜன. 1: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக போட்டித் தேர்வுகளுக்கான அறிவுசார் மையம் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், பயிற்சியாளர்கள் அறை, ஆசிரியர்கள் அறை, கணினி அறை, நூலகம், வாகனம் நிறுத்துமிடம் , 1000 பேர் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் கருத்தரங்கு கட்டிடமும், உணவு அருந்தக்கூடிய உணவருந்தும் அறைகளும் கட்டப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளும், சாலை வசதி, வாகனம் நிறுத்தும் வசதி, சுற்றுசுவர் வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்