கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு, அக். 27: பள்ளிப்பட்டு பகுதியில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட ஜங்காலப்பள்ளி, நெடியம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கல்லாமேடு ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் எஸ்.தாமோதரன் துவக்கிவைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் முகுந்தன், பரணி, கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் சரவணன், பார்த்தசாரதி, உதவியாளர் வராலு, செயற்கை முறை கருவூட்டாளர் ராஜ்குமார் ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மலட்டுத்தன்மை சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் மொத்தம் 704 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டன. மேலும் கலப்பின கிடாரிகள் பேரணி நடத்தி சிறந்த கலப்பின கன்றுகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் சானூர் மல்லாவரத்தில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,045 கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்